எமது நோக்கு
“மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினுடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உரிய அரச நிறுவனமாக இருத்தல்”
எமது கொள்கை
“அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனுடாக சமூக வழங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயாந்த செயல் திறன் மிக்கதும் பயனுறுதி மிகமதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.”
பிரதேச செயலகத்தைப் பற்றிய ஆரம்ப தகவல்கள்.
இச் செயலகம் கடந்த 24.05.2002ம் திகதி புதிதாக (தற்காலிக கட்டிடத்தில்) திறக்கப்பட்ட ஓர் செயலகமாக இருப்பினும் ஏனைய பிரதேச செயலகங்களைப் போன்றே பெரும்பாலான திணைக்களங்களின் கடமைகளை இச் செயலகமும் மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்'ஷ அவர்களின் 'மஹிந்த சிந்தனை'யின் கீழ் முன்னால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அனர்த்த நிவாரண சேவைகள் பிரதி அமைச்சருமாகிய கௌரவ அல்-ஹாஜ் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர்அலி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இவ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக புதிய நிர்வாக கட்டிடம் கௌரவ எஸ். ஜவாஹிர்சாலி (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) திருமதி. நிஹாரா மௌஜூத் (பிரதேச செயலாளர்) ஆகியோரின் பங்குபற்றலுடன் கௌரவ முன்னால் அமைச்சர் அவர்களினால் 19.03.2010ம் திகதி வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
அந்த வகையில் இச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி மற்றும் செயற்திட்டங்கள் போன்ற விபரங்களுடன் இதுவரை கிடைக்கப்பெற்ற சகல வளங்களையும் பயன்படுத்தி இப்பிரதேச அனைத்துத் துறைகளையும் முன்னேற்றக் கூடிய கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 14 பிரதேச செயலக நிருவாகப் பிரிவுகள் காணப்படுகின்றன. அவையாவன, மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று, போரதீவுப் பற்று, மண்முனை தெற்கு, ஏறாவூர் பற்று, கோறளைப் பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, காத்தான்குடி, மண்முனை தெற்கு எருவில் பற்று, மண்முனை தென்மேற்கு, ஏறாவூர் நகர், கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று வடக்கு.
அமைவிடம்
எமது கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலுள்ள ஓர் பிரதேச செயலகமாகும். எமது செயலகப் பிரிவில் 09 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கியுள்ளது. மட்டக்களப்பு கொழும்பு வீதியின் பிரதான வீதியின் அருகில் தியாவட்டவானில் எமது செயலகம் அமைந்துள்ளது. கொழும்பு மாநகரின் கிழக்கு நோக்கிய 208 கி.மீ. தூரத்திலும், திருகோணமலை நகரின் தெற்கே 176 கி.மீ. தூரத்திலும், மட்டக்களப்பு மாநகரின் வடக்கே 36 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இப்பிரிவிற்குரிய மொத்தமாக சனத்தொகை 32283ஆக காணப்படுகின்றது. அதில் 8276 குடும்பங்கள் காணப்படுகின்றன. அதில் 15923 ஆண்களும், 16360 பெண்களும் அடங்குகின்றனர். இப்பிரிவு மக்களின் பிரதான தொழில்களாக மீன்பிடி, விவசாயம் மற்றும் வியாபாரம் காணப்படுகின்றது.
எல்லைகள்
வடக்கு - வங்கால விரிகுடா
கிழக்கு - வாழைச்சேனை
தெற்கு - ஓட்டமாவடி
மேற்கு - கள்ளிச்சை
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றிய
பிரதேச செயலாளர்களின் விபரம்.
|
இல. |
பிரதேச செயலாளர்களின் பெயர் |
காலப்பகுதி |
|
|
இருந்து |
வரை |
||
|
01. |
திரு. எம்.சீ.எம். சரீப் |
24.05.2002 |
24.02.2003 |
|
02. |
திரு. எம்.எம். நௌபர் |
25.02.2003 |
15.09.2003 |
|
03. |
திரு. ஏ.எல்.எம். பளீழ் |
16.09.2003 |
31.08.2004 |
|
04. |
திரு. ஏ.எல்.எம். தாஸீம் |
01.09.2004 |
31.06.2005 |
|
05. |
திரு. எம்.சீ.எம். சரீப் |
01.07.2005 |
11.08.2006 |
|
06. |
திருமதி. நிஹாரா மௌஜூத் |
12.08.2006 |
இன்று வரை |
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவு விபரம்
| இல. |
கிராம சேவகர் கடமைப்பிரிவு |
கிராம சேவகர் |
|
01. |
வாழைச்சேனை - 04 |
206 |
|
02. |
பிறைந்துறைச்சேனை வடக்கு |
206ஏ |
|
03. |
வாழைச்சேனை - 05 |
206பி |
|
04. |
பிறைந்துறைச்சேனை தெற்கு |
206சி |
|
05. |
வாழைச்சேனை |
206டி |
| 06. | மாவடிச்சேனை | 208ஏ |
| 07. | செம்மண்ணோடை | 208டி |
| 08. | புனானை கிழக்கு | 211பி |
|
09. |
தியாவட்டவான் |
210சி |













