கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தின் சத்தியப்பிரமாண உறுதியுரை நிகழ்வு 2026.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நேர்மை வார்த்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களுக்கானசத்திய பிரமாண நிகழ்வு இன்று (27) பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
"சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ்வாரத்தின் (ஜுலை 27 - 31) முதல் நாள் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன் தலைமையில் சிறப்புடன் இடம்பெற்ற து. மேலும் இந்நிகழ்வில் கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.













